Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கரூரில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடையில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் கற்பக விநாயகர் பிளாஸ்டிக் கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக கடை உரிமையாளருக்கு

ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்தால் கடுமையான

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மளிகை கடை, டீக்கடை உள்ளிட்டபல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!