மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு
திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை மல்லிகை பூரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (56) இவர் கூலித் தொழிலாளி. மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று குடிபோதையில் திருவரங்கம் கன்னிமேரிதோப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாள் அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தால் இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்ற முருகானந்தம் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற ரவுடி உள்பட 4 பேர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரெட்டைமலை கோவில் செல்லும் ரெயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ஒரு பெண் உள்பட மூன்று பேர் நின்று கொண்டு கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்த ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார். பிறகு போலீசார் அங்கு இருந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்த போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 36)மற்றும் ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (வயது 47 )என்பது தெரியவந்தது.பிறகு மேற்கண்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய கல்லுக்குழி கள்ளர் தெருவை சேர்ந்த ஜேம்ஸ் அலெக்ஸ் என்பவரது மனைவி சண்முகவள்ளி (வயது 50)என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மதுரை வீரன் சுவாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 33)
கீழப்புதூர் பகுதியை சேர்ந்த விஜயபாபு (வயது 28 )ஆகிய இரண்டு ரவுடிகளை பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பிடித்து வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர்.
புகையிலைப் பொருட்களை விற்பனை- 3 பேர் கைது
திருச்சி ஜூலை 6- திருச்சி கண்டோமென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வழிவிடு முருகன் கோவில் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கோரிமேடு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சம்சுதீன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 80 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று திருச்சி மிளகு பாறை அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 40) என்பவரையும், இதேபோன்று பெரிய மிளகு பாறை நாயக்கர் தெரு பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஐயப்பன் (வயது 45) என்பவரை செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி ஜூலை 6- திருச்சி ஓடத்துறை பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது போதை மாத்திரை விற்றுக்கொண்டிருந்த மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஆசிக் பாஷா (வயது 24) கல்யாண ராமன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 27) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
