திருச்சி கரூர் பைபாஸ் பாலம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 37 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் பைபாஸ் பாலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தில்லைநகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 90 இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்த கலீம் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், ரூ.360 ரொக்கப் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லைநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
