Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொடரும் கொலை மிரட்டல்.. சல்மானுக்கு புதிய புல்லட் புரூப் கார் ..

மகாராஷ்டிரா அரசியல் தலைவரும், நண்பருமான பாபா சித்திக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரபல நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சித்திக்கை கொலை செய்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மீண்டும் சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, தனது பாதுகாப்புக்காக ரூ.2 கோடி மதிப்பிலான புல்லட் புரூப் காரை சல்மான் கான் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த கார் புல்லட் ஷாட்களை தடுக்கும் திறன் கொண்ட கண்ணாடி கவசங்கள் உள்ளன. வெடிமருந்துகளை கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு, உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண முடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சல்மான் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக குண்டு துளைக்காத வாகனம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில், சல்மான் கான் தற்போது இந்தி பிக்பாஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த படப்பிடிப்பிற்காக சுமார் 60 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவை அவர் நியமித்துள்ளார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது போலீசாரும் சல்மானுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!