Skip to content
Home » சிகை அலங்கார கலைஞர்களை பாராட்டிய நடிகர் ரோபோ சங்கர் ….

சிகை அலங்கார கலைஞர்களை பாராட்டிய நடிகர் ரோபோ சங்கர் ….

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் சிகை அலங்கார கலைஞர்கள் சார்பில் நடந்த விழாவில், நடிகர் ரோபோ சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது… சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை வெற்றி அடையச் செய்த பொதுமக்களுக்கும், அதை சரியான முறையில் பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்த்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

சிகை அலங்கார கலைஞர்களை பெருமைப்படுத்த வேண்டும் என்பதே சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் முழு நோக்கமாகும். அதாவது, படிச்ச தொழிலை விட புடிச்ச தொழிலை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த படத்தினுடைய மையக் கருவாகும். அதை மையமாக வைத்து படம் எடுத்த இயக்குனரின் கனவு படம் இது.

இயக்குனர் அதை மிக அழகாக காண்பித்து இருப்பார். சிகை அலங்கார கலைஞர்களை தாழ்த்தும் வகையில் நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால், சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை பார்த்து விட்டு வந்து, கண்ணீர் விட்டதாக அதிக சிகை அலங்கார கலைஞர்கள் என்னிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது, எங்களுக்கு ஒரு தேசிய விருது கிடைத்த மாதிரி அந்தப் படத்தில் எங்களை மேன்மைப்படுத்தி காண்பித்து இருப்பது, எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறினர். எங்களுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது. ஏனெனில், அந்த அளவுக்கு ஒவ்வொரு சிலை அலங்கார கலைஞர்களை  ருமைப்படுத்தும் விதமாக, அந்த படத்தில் காட்சி அமைப்புகள் இருக்கிறது.

தமிழ்நாட்டில் சலூன் கடைகள் இல்லையெனில், மக்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதாவது, நாம் அனைவரும் தாடியும் மீசையுமாக பைத்தியக்காரர்களாக அலைந்து திரிந்து கொண்டிருப்போம். அப்படிப்பட்ட நம்மை அழகாக ஆக்குவது அவர்கள்தான்.

மங்களகரமான தொழிலை செய்யக்கூடிய கலைஞர்கள் அவர்கள்தான். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டதுதான் அந்த திரைப்படம். அதாவது அழகாக, நேர்த்தியாக 10 ஆண்டுகள் எடுக்கப்பட்ட ஒரு கனவு திரைப்படம்தான் அது. மிக அழகாகவும், நேர்த்தியாகவும் ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார்.

முதல் பகுதியில் நானும் சத்யராஜ் சாரும் ஒரு ஜாலியான முறையில் நடித்து இருப்போம். அதில் என்னுடைய பங்கு சின்ன பங்குதான். உங்களை மகிழ்விக்கின்ற பங்கு. ஆனாலும், அதில் நடித்த ஆர்.கே.பாலாஜியாக இருக்கட்டும், அந்த திரைப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் சாராக இருக்கட்டும் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. படத்தின் செகண்டாப்பில் ஒரு மோட்டிவேஷனை இந்த திரைப்படம் அமைத்திருப்பது தான் அதற்கு காரணம். மிக அழகாக சொல்லி இருக்காரு இயக்குனர்.

இந்த திரைப்படத்தினுடைய வெற்றி விழாவாக, இங்கு இந்த கிராமத்துல, இங்குள்ள மக்கள் மத்தியில, இங்குள்ள சிகை அலங்கார இளைஞர்கள் மத்தியில நாங்கள் நடத்துவது, எங்களுக்கு மிக மிக சந்தோஷம். முதன்முதலாக 25 குடும்பங்களுக்கு ஊக்கத் தொகையும், அவர்களை கௌரவிக்கும் விதமாக, இந்த விழாவை எடுத்து நடத்தி இருக்கிறோம். அதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி என்று அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!