Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பௌர்ணமியை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் 108 குத்து விளக்கு பூஜை..

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 108 குத்து விளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு 22 வகை பொருட்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று பணம் செலுத்தும் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கண்ட பொருட்கள் விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!