திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்த தங்க தேர் இழுப்பது வழக்கம். கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக தங்கத் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
மீண்டும் தங்கத் தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில்
பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரை தூய்மைபடுத்தி மின் விளக்குகள் பொருத்துப் பணிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந் நிலையில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக இன்று தங்கத் தேர் இழுத்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.