சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு நிர்பயா நிதியின்கீழ் ரூ.4.67 கோடி மதிப்பில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்து நாப்கின் அலமாரிகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) டி.சினேகா, கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.