Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தூய்மை பணியாளர் மர்ம மரணம்! உயிரிழப்பால் பரபரப்பு

கரூரில் தூய்மை பணியாளர் மர்ம மரணம்! உயிரிழப்பால் பரபரப்பு

கரூரில் மர்மமான முறையில் தூய்மை பணியாளர் உயிரிழப்பு – உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து தர்ணா.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலசுப்பிரமியம், தனது மனைவி நீலவேணி மற்றும் 16 வயது மகள்கள் துர்கா, புனிதா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பணிக்கு சென்ற அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

இதையடுத்து உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது, ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தோகைமலை போலீசார், பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த டிஎஸ்பி ராஜேஷ்குமார் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!