Skip to content
Home » “ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

  • by Senthil

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர் புதிய முயற்சி தான் ‘ஸ்கிரிப்டிக்’.

பிரபல பாடலாசிரியர், எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர், மற்றும் ‘டூப்பாடூ’ போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தவர் என பன்முக வித்தகராக திகழும் மதன் கார்க்கி மற்றும் பிரபல தயாரிப்பாளர்-விநியோகஸ்தர்,

பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, “ஸ்கிரிப்டிக்” (SCRIPTick) என்ற பெயரில் ஓர் திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளனர்.

“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி மற்றும் www.scriptick.in என்ற அதன் இணையதளத்தை மூத்த திரைப்பட இயக்குநர், ‘இயக்குநர் இமயம்’ திரு பாரதிராஜா அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

10 நேரடி திரைக்கதைகள், 1 தழுவல் மற்றும் 3 மறு ஆக்க திரைக்கதைகளுடன் துவக்கப்பட்டுள்ள ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கியில் தங்கள் திரைக்கதையை சேர்க்க ஆர்வமாக உள்ள திரைக்கதாசிரியர்களும், நல்ல திரைக்கதைகளை எதிர்பார்த்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களும், எங்களை கீழ்கண்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம். இணையதளம்: www.scriptick.in , மின்னஞ்சல் முகவரி: contact@scriptick.in,  அலைபேசி: 90030 78000/90030 79000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!