Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக தொழில் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிவு – 15 பேர் பணி நீக்கம்!

தமிழக தொழில் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிவு – 15 பேர் பணி நீக்கம்!

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் ஆந்திரா சென்றது தொடர்பாக Guidance TamilNadu-வில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பாட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் ஆந்திரா சென்றது தொடர்பாக Guidance TamilNadu-வில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பாட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 15 பேரில் மூவர் தற்போது ஆந்திர தொழில்துறையில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறையில் இருந்துகொண்டு ஆந்திராவுக்கு உளவாளிகள் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகள் தொடர்பான முக்கிய தகவல்கள் ஆந்திராவுக்கு லீக் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில் ரகசியங்களை பாதுகாக்க காப்புரிமை தொடர்பான எந்த ஒப்பந்தமும் இல்லாமல் பலரை முந்தைய அரசு பணியில் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 3 பேர் உடனடியாக ஆந்திராவின் பொருளாதார மேம்பாட்டு வாரிய பணியில் இணைந்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link