Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி…!

கோவை: அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை Vijay தலைமையிலான தவெக-க்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் ஒருவர் தனக்கே எல்லாம் வேண்டும், தான் மட்டும் இருந்தால் போதும் என்ற மனநிலையுடன் செயல்படுகிறார். அதனால்தான் கட்சி இன்றைய நிலைக்கு வந்துள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.

அதே நேரத்தில், அரசு சார்பில் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெக-க்கு ஆதரவு அளித்ததாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்களில் எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் இதுவரை அப்படி எந்த வாக்குறுதியும் கூறவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

error: Content is protected !!