Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக மின்சார ஆணையத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழக மின்சார ஆணையத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்கிறது. நீதிமன்ற அதிகாரம் உடைய ஆணையம், தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.இரு உறுப்பினர்களும் ஓய்வு பெற்றதால், கடந்த மார்ச்சில் இருந்து, சட்ட உறுப்பினர் பதவி, மற்றொரு உறுப்பினர் பதவி ஜூனில் இருந்து காலியாக உள்ளன.

கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய அரசு அறிவுறுத்தலின் அடிப்படையில், தலைவராக இருந்த மணிவண்ணன், ஜூன் இறுதியில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த மூன்று பதவிகளுக்கும், புதியவர்களை தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி டீக்கா ராமன் தலைமையில், தமிழக தலைமைச் செயலாளர், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவை, கடந்த ஜூலையில் அரசு அமைத்தது.

அக்குழு, பலரிடம் இருந்தும் விண்ணப்பங்களை பெற்றது. தேர்வு குழுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில், இம்மாதம் 15ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக, ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், உறுப்பினராக மாஸ்கர்னஸ், சட்ட உறுப்பினராக முத்து சாரதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், சென்னை கிண்டியில் உள்ள ஆணைய அலுவலகத்தில், பொறுப்பேற்றுக் கொண்டனர். ராதாகிருஷ்ணன் மின் வாரிய முன்னாள் தலைவராகவும், மாஸ்கர்னஸ் மின் பகிர்மான கழக முன்னாள் இயக்குனராகவும் பணியாற்றியவர்கள். முத்து சாரதா, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆவார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளார்.

இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!