மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யுவசேனா அமைப்பினர் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நகராட்சி ஆணையர் முன்னிலையில் ஒரு நாயை அவிழ்த்துவிட்டு, தெருநாய் பிரச்சினை குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
