கரூரில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்கள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது வீட்டில் தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிறுமியை இன்று காலை 10:30 மணி முதல் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் அக்கம், பக்கத்தில் தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் (23) என்பவர் வீட்டில் இருந்ததால், அந்த நபரை சிறுமியின் உறவினர்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கரூர் அடுத்துள்ள கோடங்கிபட்டி சேர்ந்த திருமணமான நபரான விஜய் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்கள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
