Skip to content
Home » வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

கரூர் அடுத்த கோடங்கிபட்டி பகுதியில் திமுக மூத்த முன்னோடிகள் 1273 நபர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கும் பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..கரூர் என்றாலே உற்சாகம் தரக்கூடிய மாவட்டம். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று பழமொழி சொல்வார்கள். ஆனால், கழக வேலை என்று வந்துவிட்டால் செந்தில் பாலாஜிக்கு நிகர் யாருமில்லை. மாவட்டச் செயலாளர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு செந்தில் பாலாஜி.  பாராளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சார கூட்டத்தை கரூர் மாவட்டத்தில் துவங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி என்னிடம் கோரிக்கை வைத்தார். கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கக்கூடிய இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியை, பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார பொதுக்கூட்டமாக நீங்கள் நினைத்து கொள்ளுங்கள். எனவே, அனைவரும் இப்போதே பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொள்ளுங்கள். 2021 தேர்தலுக்கு முன்பு தமிழகத்தின் நிலை என்ன? பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 5 இலட்சம் கோடி கடன் இருந்தது. எங்கு பார்த்தாலும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தது. கோவை மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்பு இருந்த நிலையில், கவச உடைய அணிந்து மருத்துவமனையில் நேரடியாக சென்று நோயாளிகளை முதல்வர் நலம் விசாரித்தார்.

ஆனால், கொரோனா காலத்தில் மக்களை வெளியே வரச் சொல்லி விளக்கு ஏற்றுங்கள், கைதட்டுங்கள் என்று பிரதமர் கூறினார். அதை அப்படியே கேட்டு அப்போதைய அதிமுக முதல்வர் செய்தார். ஆனால், திமுக ஆட்சியில் உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டன. ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் 4000 கொடுக்கப்படும் என்று அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இரண்டு தவணைகளில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொடுத்தவர் முதல்வர்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று அதிமுகவினர் கூறினர். ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அந்த திட்டத்தை முதல்வர் நிறைவேற்றினார். இதுபோல எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சி காலம் முடியும் வரை எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஒற்றுமையாக இருந்தார்கள். ஆட்சி காலம் முடிந்து அடுத்த நாளே இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து விட்டார்கள். இதை மக்கள் உணர வேண்டும் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!