Skip to content
Home » கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

  • by Senthil

பொள்ளாச்சியில் சீரியல் நடிகை கணவரை கொலை செய்ய நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மற்றும் நண்பர் கைது..

கோவை மாவடடம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ரமேஷ் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா  என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா தனது தாய் வீடான பீளமேடு சென்று விட்டார்.சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதால் ரம்யா கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது ரம்யா….. சுந்தரி,கண்ணெதிரே தோன்றினாள் சீரியல் நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

ரமேஷ் இரண்டு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பீளமேடு சென்று ரம்யாவிடம் குழந்தைகளையும் தன் தாயையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்,இதை அடுத்து ரம்யா சில தினங்கள் முன் ரமேஷ் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் ரம்யா தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம் தன் கணவர் குடித்துவிட்டு கொடுமை படுத்துவதாகவும் அவரை கொலை செய்ய வேண்டுமென  கூறியுள்ளார்.

இதை சந்திரசேகர்  ஏற்றுக்கொண்டு,  ரமேசுக்கு முடிவு கட்டுவதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் நேற்று  முன்தினம்  இரவு ரம்யாவும் ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் மோதி  தள்ளினார். கீழே விழுந்த ரமேசை  கடுமையாக தாக்கி ஆக்சா பிளேடால் கை? கழுத்து பகுதிகளை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். அவர்தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் ,  ரம்யாவின்மொபைல் போனில் வந்த அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் சீரியல் நடிகை தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது.ரம்யா மற்றும் சந்திரசேகரனை கைது செய்த மதுக்கரை  போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். துணை நடிகை கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!