Skip to content
Home » ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக் கட்டுகள் போல சரித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். முகம்மது சமியின் சிறப்பான பந்து வீச்சை பாராட்டி நெட்டிசன்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இந்திய அணியின் வெற்றிக்கனவை தகர்க்கும் வகையில் நியூசி வீரர்கள் அதிரடி காட்டினர். ஆட்டத்தின் 30 ஓவர்கள் வரை வெற்றி  நியூசி பக்கமே இருந்தது. என்ன ஆகப்போகிறதோ என்ற  பயத்தில்  இந்திய ரசிகர்கள்  திக் திக் என மைதானத்தில்   பரபரப்பின் உச்சத்தில் இருந்தனர்.  இந்த நிலையில் தான் ஷமி விக்கெட்டுகளை சாய்த்து, ஆபத்து பாந்தவனாக இந்திய அணியை  கரை சேர்த்தார் ஷமி.

சமியின் பந்து வீச்சை  உலக கிரிக்கெட் ரசிர்கள் பாராட்டுகிறார்கள். நம்ம போலீசாரும் தங்கள் பங்குக்கு வித்தியாசமாக கலாய்த்து ஷமியை பாராட்டி உள்ளனர்.

டில்லி போலீசார், மும்பை போலீசை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது. டில்லி காவல் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று (நேற்று) முகமது ஷமி நடத்தியுள்ள கொடூர தாக்குதலுக்கு அவர் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்யாது என்று நம்புகிறோம் ‘ என கிண்டலாக பதிவிட்டு இருந்தது.

இதற்கு பதிலளித்த மும்பை போலீஸ் துறையின் சிறப்பு காவல் ஆணையர் தேவன் பார்தி, “அப்படி எதுவும் இல்லை, ஏனெனில் இது தற்காப்புக்காக நடத்திய தாக்குதலின் கீழ் வருகிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். டில்லி மற்றும் மும்பை போலீசார் இடையே நடந்த ஜாலியான பதிவுகள் நெட்டிசன்கள் இடையே வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!