Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் கூறியதாவது;-
அமெரிக்கா- ஈரான் போரின் காரணமாக மூலப்பொருட்களின் விலை ஏறி,
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆகவே
முடித்திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, முடிதிருத்தும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி ஏசி ஹேர் கட் கட்டணம் ரூ. 350 ஆகவும், சாதாரண கட்டணம் 150ஆகவும்,
கட்டிங் மற்றும் சேவிங் முறையே ரூ. 300, ரூ. 250 எனவும், சேவிங் முறையே ரூ. 130, ரூ. 100, சிறுவர் கட்டிங் ரூ. 180, ரூ.130 எனவும் இன்று முதல் உயர்த்தப்படுகிறது.
மேலும் ஹேர் டை கட்டணம் ஏசி மற்றும் நான் ஏசி முறையே ரூ. 350 ரூ. 250, பேசியல் ரூ.1500 ரூ.

800, ப்ளீச்சிங் ரூ. 800 ரூ. 500 ,தலை கழுவுதல் ரூ. 120 ரூ. 100 ,கலரிங் ரூ.300 ரூ.250, ஆயில் மசாஜ் ரூ. 500 ரூ. 350 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் நடப்பு சூழலை கருத்தில் கொண்டு, தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!