Skip to content
Home » மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

உலக சுகாதார நிறுவனம்1948ல்  நிறுவப்பட்டது. இதை குறிக்கும் வகையில்   ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம்  கொண்டாடப்படுகிறது. நேற்றுஇந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், உலகில் பொது சுகாதார அக்கறையின் முன்னுரிமைப் பகுதியை முன்னிலைப்படுத்த ஒரு கருப்பொருள்தேர்ந்தெடுக்கப்படுகிறது. உலக சுகாதார தினத்தின் இந்தாண்டு கருப்பொருள், ‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ என்பதாகும். உலகம் முழுவதும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.

உலக சுகாதார தினத்தையொட்டி நடிகை ஷில்பா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1994 ல் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு  ஷில்பாஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ஷில்பா ஷெட்டி, மகள் சமிசாவுடன்உடற்பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!