Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் கிராமத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று

(27.06.2023) துவக்கி வைத்தார். கால்நடைக்கான தீவணப் பயிர்களை கால்நடை வளர்ப்போரிடம் வழங்கினார். உடன் மண்டல இணை இயக்குநர் (கூ.பொ.) மரு.எஸ்.எஸ்.அரசு, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.குழந்தைசாமி, பொது மேலாளர் (ஆவின்)  எஸ்.தங்கமணி, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் மரு.பூ.புவராஜன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் சி.சோலையம்மாள் சிவக்குமார் (ஒலியமங்கலம்),  முருகேசன் (மேலத்தானியம்), ஒன்றியக்குழு உறுப்பினர்  வி.சிவரஞ்சனி வினோத்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!