Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகங்கை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 5 சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 5 மரண தண்டனை

சிவகங்கை மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 5 மரண தண்டனை விதித்த நீதிமன்றம், 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உள்ளது. சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!