மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மூத்த மகனான பிரசாத்துக்கு திருமணம் ஆகாததால் அவர் தாய் தந்தையருடன் தோட்டத்து வீட்டில் வசித்துக்கொண்டு வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து வந்ததாகவும் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த பிரசாந்த் தனது தாய் பெத்தமாளிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தாய் பணம் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த பிரசாந்த் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து பெத்தமாளின் வலது புற கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடினார். உடனே பெத்தமாளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு வந்து படுகாயம் அடைந்த பெத்தம்மாவை காரில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பெத்தமாளை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து கொலையாளியான பெத்தமாளின் மகன் பிரசாந்த்தை வலைவீசி தேடி வருகிறனர். மது குடிப்பதற்காக தாய் இடம் பணம் கேட்டு பணம் தராததால் பெற்ற தாயை கொலை செய்து விட்டு மகன் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
