Skip to content
Home » மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

  • by Senthil

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கரூர் மாவட்டம் புன்னசத்திரம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் உமா மகேஸ்வரி,இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வந்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அந்த பெண் கணவனை இழந்த எனக்கு இதுவரை அரசு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை,பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

எனது மகன் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் . அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி பலமுறை மனு அழுத்திருந்தேன்,அந்த மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்த பெண்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்,அப்போது அவர் எந்த உதவியும் அதிகாரிகள் செய்து தர முன் வருவதில்லை என கண்ணீர் மல்க குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்ற காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து மனுவுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

கணவனை இழந்து ஆதரவற்ற அந்த பெண்ணிற்கு கலப்பு திருமணம் சான்று மற்றும் அவரது மகனுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை பரிசீலனை செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கார் முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!