திரைப்பட நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தன் மனைவியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நெய் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் அவரை அடையாளம் கண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வழிபாட்டை முடித்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் அடுத்த பட அப்டேட் குறித்து கேட்டபோது, பதிலளிப்பதை தவிர்த்து “ஓம் நமசிவாய” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
