Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம். ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலசுப்பிரமணியசுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ஆலய சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலசுப்பிரமணியசுவாமிக்கு நடைபெற்ற ஆடி கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!