Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தஞ்சை பூக்காரத் தெரு அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் சுப்ரமணியருக்கு பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். தஞ்சை பூக்கார தெருவில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு இணையாக கருதப்படும் இக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுப்ரமணியருக்கு விபூதி திரவிய பொடி மஞ்சள் இளநீர் எலுமிச்சம்பழம்

தேன் பஞ்சாமிர்தம் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பலவகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து சுப்ரமணியருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அபிஷேகத்தை கண்டு சுப்ரமணியரை வழிபட்டனர்.

error: Content is protected !!