புலியூர் காளிபாளையத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம், புலியூர் காளிபாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பல்வேறு சேவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு கால்நடை உணவுப் பொருட்களை வழங்கினார்.
முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை, சினைப் பரிசோதனை,

செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், மடி வீக்க நோய் மேலாண்மை, குடற்புழு நீக்கம் மற்றும் சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ஆண்மை நீக்கம், மலட்டுத்தன்மைக்கான சிறப்பு சிகிச்சை, தாது உப்பு கலவைகள்

வழங்குதல், கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் நோய் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

கால்நடைகளின் உடல்நிலையை துல்லியமாகக் கண்டறியும் வகையில் ஸ்கேன் பரிசோதனை வசதியும் முகாமில் வழங்கப்பட்டது.
