Skip to content
Home » சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

சந்தீப் சர்மா பந்தை விளாசி… ஐதராபாத் த்ரில் வெற்றி…. சமத் அட்டகாசம்

ஜெய்ப்பூர், நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று  நடந்த 52வது லீக் ஆட்டத்த்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, யஷ்யஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்இனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 35 ரன் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் உடன் ஜோடி சேர்ந்த பட்லர் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  59 பந்துகளை சந்தித்த பட்லர் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 95 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதனால், பட்லர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். ஆனால், மறுமுனையில் சாம்சனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளை சந்தித்த சாம்சன் 4 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அமொல்பிரீத் சிங் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

25 பந்துகளை சந்தித்த அமொல்பிரீத் சிங் 33 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் அதிரடியாக ஆடினார். அபிஷேக் 34 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.  அடுத்து வந்த ஹெண்ட்ரி கிளாசன் 12 பந்தில் 26 ரன் எடுத்து அவுட் ஆனார். அதேவேளை மறுமுனையில் அதிரடியாக ஆடிய ராகுல் திரிபாதி 29 பந்தில் 47 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் அடம் மார்க்ரம் 6 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிலிப்ஸ் 7 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 25 ரன்கள் குவித்து முக்கியமான கட்டத்தில் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். ஐதராபாத் வெற்றிபெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

பந்து வீச்சில் கைதேர்ந்தவரானசந்தீப் சர்மா(சென்னையில் சிஎஸ்கே தோற்க இவரது பந்து வீச்சே காரணம்) கடைசி ஓவரை வீசினார். கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் அப்துல் சமத் பேட்டிங் செய்தார். சர்மா கடைசி பந்தை வீச அதை சமத் தூக்கி அடித்தார் அது கேட்ச் ஆக மாறியது. இதனால், ராஜஸ்தான் வெற்றிபெற்றதாக அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடினார்.

அப்போது, கடைசி பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமத் பேட்டிங் செய்தார். சந்தீப் சர்மா கடைசி பந்தை வீச அந்த பந்தை அப்துல் சமத் சிக்சருக்கு விளாசினார். இதனால், ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் ஐதராபாத் திரில் வெற்றிபெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!