இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படையினர் அதிவேக படகில் வந்து விரட்டி மிரட்டுவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்து, படகு ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்தியக் கடல் எல்லைக்குள்தான் மீன் பிடித்து கொண்டிருந்தோம் என்பதற்கு GPS கருவி ஆதாரங்கள் உள்ளதாகவும் மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்திய எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படை அத்துமீறல்
