Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி துவங்கி நடைபெற்றது. இதில் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் மேலாளர்

கு.தமிழ்செல்வி , உதவி மேலாளர் தி.சண்முகவடி ,கண்காணிப்பாளர்கள் மு.கோபாலகிருஷ்ணன் , செ.சரண்யா , வெ.மீனாட்சி , ஆய்வாளர்கள் கு.மங்கையர் செல்வி, பாஸ்கர், பானுமதி ஆகியோர் மேற்பவையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 72,00,701 ரூபாயும் , தங்கம் 233 கிராம் , வெள்ளி 1442 கிராம் மற்றும் 372 வெளிநாட்டு ரூபாய்தாள் கிடைக்கப்பெற்றுள்ளது என கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!