Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை  தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால்,  மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு   நிதி ஒதுக்க மறுத்து வருகிறது. இதனால்  அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  சம்பளம் வழங்குவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்களுக்கு  வரும் மாதங்களில் எப்படி சம்பளம்  வழங்குவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ் பொய்யாமொழி இன்று தலைமை செயலாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  சிறப்பு நிதி ஒதுக்குவது குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!