கிறிஸ்துமஸ் , புத்தாண்டையொட்டி பேக்கரிகளில் விதவிதமான, வித்தியாசமான, மக்களை கவரும் பலவகை கேக்குகள் தயாரித்து பார்வைக்கு வைப்பார்கள். ஆனால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் உருவத்தில் 92 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.
அச்சு அசலாக முதல்வர் ஸ்டாலின் அங்கு நிற்பது போன்று 7 அடி உயரத்தில் கேக் உருவாக்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவன நிர்வாகி கூறும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். எனவே அவரை வாழ்த்தும் விதமாக புதுமையான இந்த கேக் தயாரித்து உள்ளோம்.
இந்த கேக்கை 90 கிலோ சர்க்கரை, 80 முட்டை உள்ளிட்ட பொருட்கள் கலந்த கல வையால் 24 மணிநேரத்தில் பேக்கரி ஊழியர்கள் 4பேர் குழுவாக சேர்ந்து தயாரித்துள்ளனர். புத்தாண்டு வரை இந்த கேக் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்றார்.