Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான பூமணி மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் நிலவிய கட்டமைப்பை எளிமையான மொழியில் வெளிப்படுத்தியவர் பூமணி. தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத பல வட்டார வழக்குச் சொற்கள் அவரது படைப்புகள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டன. பூமணிக்கு சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்த ‘அஞ்ஞாடி’ எனும் புதினத்தின் தலைப்பும் கூட அத்தகையதே. வெக்கை நாவல் அசுரன் திரைப்படமாக மாறியபோது, மேலும் பல இளம் வாசகர்களும் பூமணி எழுத்துகளைப் படிக்கத் தொடங்கினர்.

error: Content is protected !!