ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 14வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அங்குஷ் பங்கால் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அங்குஷ் பங்கால், வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
குத்துச்சண்டையில் அசத்தல்.. இந்தியாவுக்கு 14வது தங்கம்
