கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது திடீர் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வி.எஸ்.பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
வி.எஸ்.பாபு திடீர் மறைவு அதிர்ச்சி தருகிறது: மு.க.ஸ்டாலின் இரங்கல்
