Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்-தரமற்ற மருந்தே காரணம்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் மாணவி உயிரிழந்த விவகாரம் – தரமற்ற மருந்தே காரணம் என விசாரணை குழுவின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு வலி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதா திடீரென உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இந்த மரணத்திற்கு காரணம் எனக்கூறி உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, செவிலியர் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது இந்த உயர்மட்ட விசாரணை குழு தனது அதிர்ச்சியூட்டும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், மாணவி சீதாவின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமல்ல என்றும், அறுவை சிகிச்சையின் போது அவருக்கு செலுத்தப்பட்ட ‘டெக்சாம்மெதாசோன்’ (INJ DEXAMETHASONE) என்ற தரமற்ற மருந்தே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த குறிப்பிட்ட பேட்ச் டெக்சாம்மெதாசோன் மருந்தை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அந்த பேட்ச் மருந்துகள் அனைத்தையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தவும் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

error: Content is protected !!