Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா செம்படாபாளையம் பகுதியில் செயல்படும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் சார்பாக கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் புகலூர் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!