Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூப்பர் மார்கெட்டில் கொள்ளை… ரிலாக்சாக கூல்ட்ரிங்ஸ்… மர்ம நபர்களின் சிசிடிவி…

நாகை அடுத்த நாகூர் சாமுதம்பி மரைக்காயர் தெருவில் AJ ரியல் சூப்பர் மார்க்கெட் என்ற பல்பொருள் அங்காடி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடை உரிமையாளர் வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்டு காத்திருந்த இரண்டு மர்ம நபர்கள் நள்ளிரவு 2 மணிக்கு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். கடையின் உள்ளே புகுந்த இரண்டு மர்ம நபர்கள் கடையில் லாக்கரை உடைத்து திருட தொடங்கினர். தொடர்ந்து பொருட்கள் மற்றும் சில ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் எந்தவித பதற்றமுமின்றி கடையின் குளிர் சாதன பெட்டியில் இருந்து

கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில்களை எடுத்து குடித்துவிட்டு அங்கிருந்து ரிலாக்ஸாக சென்றனர். நாகூரில் சூப்பர் மார்கெட்டில் திருட வந்த கும்பல் நிதானமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்துவிட்டு, அதுவும் பத்தாது என 2 கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!