Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள். அப்படி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு சூரியூர் பெரிய குளத்தில்  நடைபெறுகிறது. இது திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும் அதற்கான முன்னேற்பாடுகளாக விழா மேடை மற்றும் தடுப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இன்று மாடுபிடி வீரர்கள் பதிவு ஆரம்பிக்கப்பட்டது இதில் நேரடியாக மாடுபிடி வீரர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்களது ஆதார் கார்டு நகல் கொடுத்து பதிந்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!