கரூர் ரயில் நிலையத்தில், ரயில் மார்க்கம் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை.
கரூர் ரயில் நிலையத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த விரைவு ரயிலில்

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில்,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட

காவலர்கள் மோப்பநாய் ‘சன்னி’ உதவியுடன் பயணிகளின் உடைமைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்களை தீவிரமாக சோதனையிட்டனர்.
மேலும் பயணிகள் அமரும் இருக்கிகள் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
ரயில் மார்க்கம் வழியாக நடைபெறும் சட்டவிரோத செயல்களை கண்காணித்து, போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்கவே, சன்னி மற்றும் லக்கி மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் சோதனையால் கரூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
