Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சரண் அடையுங்கள்…. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்ட டிரம்ப், தனது சமூக ஊடகத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விடுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள். ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்போம். அவர்களின் ஏவுகணைகளைத் தரைமட்டமாக்குவோம்.இஸ்ரேலுடன் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது முக்கியமான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம். அவர்களின் மோசமான செயல்பாடுகள், அமெரிக்கா மற்றும் அயல்நாடுகளில் உள்ள நமது ராணுவ தளங்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஆபத்தானது.

ஈரானின் பயங்கரவாதத்தை இனி பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல், ஈரான் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியை குறிவைத்து நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கமேனியை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை ஈரான் தொடர்ந்து தடுத்து வருகிறது.

error: Content is protected !!