Skip to content
Home » தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000 வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்படோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000 வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

மேற்படி குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், உறுப்பினர்களுக்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள, இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள், ஒரு குழுவாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!