தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறக்கத் தனியாருக்குத் தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் வௌியிட்டுள்ள முக்கிய விபரங்கள்… ஆன்லைன் விண்ணப்பம்: மருத்துவமனை தொடங்குவதற்கான அனுமதியைப் பெற, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் அலைய வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே தேவையான அனைத்துத் தகவல்களையும், ஆவணங்களையும் பதிவேற்றம் செய்தால் போதுமானது.
உடனடி தற்காலிக சான்றிதழ்: தகவல்களை ஆன்லைனில் சமர்ப்பித்த உடனே, மருத்துவமனைக்கான தற்காலிக சான்றிதழ் (Temporary Certificate) உடனடியாக ஆன்லைனிலேயே வழங்கப்படும்.
ஆய்வு மற்றும் சரிபார்ப்பு: தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அரசின் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் மூலம் முழுமையான கள ஆய்வு (Physical Inspection) நடத்தப்படும். அந்த ஆய்வின் முடிவில் அனைத்தும் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், மருத்துவமனைக்கான நிரந்தர சான்றிதழ் (Permanent Certificate) வழங்கப்படும்.
