முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்கும் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர

திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மூலவர் தங்க கவசம் மற்றும் வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் .
உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுக சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி முருக கடவுளை வழிபட்டு வருகின்றனர்.

