Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 18- அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் நியமனமான 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து 80-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வளர்ச்சித்துறையின் காலியாக உள்ள 1500 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவற்ற எழுத்தாளர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளராக பணியாற்றுபவர்களுக்கு ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும், உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!