நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறி தைவான் நாட்டிற்கு அனுப்பிய தரகர். ஏராளமான இளைஞர்கள் தைவான் நாட்டில் சிக்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் புகார்.
இராமநாதபுரம் மாவட்டம், போத்த நதி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் கோகுல். பட்டதாரியான இவர் வேலையின்றி இருந்ததால், இவரது தந்தை வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த புரோக்கர் இராமநாதன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் நியுசிலாந்து நாட்டில் வேலை இருப்பதாக கூறி, அங்கு செல்ல 12 லட்சம் ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பி கருப்புசாமி கடந்த 2025 ஆம் தேதி 12 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ராமநாதன் ஒரு வருட காலமாக அலைகழித்து அவர்களை ஏமாற்றி இளைஞரை தைவான் நாட்டிற்கு அனுப்பி உள்ளனர். அங்கு சென்ற பிறகு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுமாறு அங்குள்ள தரகர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். அவ்வாறு ஈடுபடவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன இளைஞர் தனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். உடனடியாக தனது மகனை மீண்டும் பணம் செலுத்தி அங்கிருந்து கருப்பசாமி மீட்டு உள்ளார். இது குறித்து ராமநாதனிடம் கேட்டபோது அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றப்பட்ட கருப்பசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவரால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு தைவான் நாட்டில் சிக்கி உள்ளதாகவும் – அவர்களையும் மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
