Skip to content
Home » தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

  • by Senthil

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பொழுது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு  மோடி அஞ்சலி செலுத்த உள்ளார். எனவே இந்த பகுதி முழுவதும் பேரிகாடுகள் அமைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாகனங்கள்  இதற்குள் செல்ல  அனுமதி இல்லை . ரோடு ஷோ நிகழ்ச்சி ஏற்பாடுகளை  மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து அண்ணாமலை கூறியதாவது:

இதனை மக்கள் தரிசன யாத்திரை என  நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமா குறித்து அதிகாரப்பூர்வமாக பாஜக கட்சி சார்பில் நான் கருத்து  சொல்ல விரும்பவில்லை .  அதனை தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் . குடியரசுத் தலைவர் அதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் .

தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ  நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டியது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணக்கமாக இருந்து இந்த பேரணி நடத்தப்பட இருக்கிறது.
கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருவதாக தெரிவித்தார். கடந்த 1998 ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு  பிரதமர் மலரஞ்சலி செலுத்துகிறார்.
இதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டு உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு மூன்று நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!