தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று அமைச்சர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தியுள்ளனர். “தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின்
வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நினைவு பெருந்திரளணி நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்துவோம் என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். பள்ளிகளில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தினரின் எண்ணிக்கையை 12 லட்சமாக உயர்த்துவோம்” போன்ற தீர்மானங்களை இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார்கள்.