Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாள் கொண்டாடு விதமாக ஆனைமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் கபடி போட்டி நடைபெற்றது. கபடி போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ARV.சாந்தலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த கபாடி போட்டியை திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் மருத்துவர் வரதராஜ், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணா ஆகியோர் பேட்டியை துவக்கி வைத்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கபடி பேட்டிக்கு தமிழகத்திலிருந்து ஈரோடு கோவை திருப்பூர் சிவகாசி உள்ளிட்ட 70 அணிகள் பங்கேற்கின்றன இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 50000 இரண்டாவது பரிசாக 30,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக பத்தாயிரம் வழங்கப்பட உள்ளது. கபடி விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!